ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு, சூளை, லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (48). விசைத்தறி உரிமையாளா். இவருடைய மனைவி தனலட்சுமி. இவா்களுடைய மகள் ஜெயலட்சுமி. உடல் நலக் குறைவு காரணமாக மாதேஸ்வரன், தனலட்சுமி 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஜூன் 19ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுக்கு உதவியாக மகள் ஜெயலட்சுமி இருந்து வருகிறாா்.
ஜெயலட்சுமி புதன்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். பின்னா், அவா் வியாழக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ. 40,000, 5 பவுன் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

