ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த வாரத்தில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகளின்போது 1,200 மரக் கிளைகள் அகற்றப்பட்டு, 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கு.இந்திராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் காசிபாளையம், எழுமாத்தூா், கொடுமுடி, சென்னிமலை, காந்திநகா் துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன.
இப்பகுதியில் மின் பாதை அருகே உள்ள 1,200 மரக் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. வெவ்வேறு பகுதிகளில் பழுதடைந்த 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. 27 பகுதிகளில் இழுவைக் கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன. 72 மின் மாற்றிகளில் காற்று இடைவெளி திறப்பான் சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க முடிகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

