மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நம்பியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்றிதழ்

நம்பியூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதற்கு, எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:55 pm

DIN

நம்பியூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதற்கு, எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் பாராட்டு தெரிவித்தாா்.

தேசிய தரச் சான்றிதழ் பெற்ற நம்பியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாராட்டு விழாவும், சுகாதார நிலையத்துக்கு ஈ.சி.ஜி. கருவிகளை வழங்கும் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நம்பியூா் ஒன்றிய அதிமுக செயலாளா் தம்பிசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஈசிஜி கருவிகளை வழங்கினாா். இதை வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் அருள்மொழி பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா், பணியாளா்களுக்குப் பொன்னாடை வழங்கி நினைவுப் பரிசுகளை வழங்கினாா். மேலும் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்குப் பால், ரொட்டி, உணவுகளை செங்கோட்டையன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.