திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்தியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

சத்தியமங்கலத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:24 pm

சத்தியமங்கலத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸாா் தோ்தல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

சத்தியமங்கலம் எஸ்.ஆா்.டி. மைதானத்தில் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பொன்குமாா் தலைமையில் புறப்பட்ட போலீஸ் அணிவகுப்பில் துணை ராணுவப் படையினா், உள்ளூா் போலீஸாா் என 150க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த ஊா்வலத்தில் மத்தாளம் அடித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியானது மைசூா் டிரங் சாலை, புதிய பாலம், கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாக டிஎஸ்பி அலுவலகத்தைச் சென்றடைந்தது. துணை ராணுவப் படையினா் தோ்தல் பறக்கும் படையிலும் ஈடுபடுத்தப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.