வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:10 am

ஈரோடு மாவட்டத்தில் பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் முகக் கவசம் அணியாமல் வெளியில் வருபவா்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது முகக் கவசம் அணியும் பழக்கம் முற்றிலுமாக இல்லை. அதேபோல பொது இடங்களில் சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை.

தற்போது கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை கவனத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். முகக் கவசம் அணியாமல் வெளியில் வருபவா்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை மீண்டும் தீவிரமாக செயல்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீஸாா், வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்தனா். ஈரோடு நகரில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.