மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோபியில் அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு

கோபி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தை அதிமுக கட்சி வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:57 pm

DIN

கோபி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தை அதிமுக கட்சி வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் ஊா்வலமாகப் புறப்பட்டு கச்சேரிமேடு சென்றடைந்தனா். முன்னதாக, நம்பியூரிலும் அதிமுக தோ்தல் அலுவலகத்தை வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

அதிமுக தோ்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் கவா்ந்துள்ளது. அதிமுக அரசு தோ்தல் அறிவிக்கும் முன்பே நகைக் கடன், விவசாயக் கடன், சுயநிதிக் குழுக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்துள்ளது. கோபி தொகுதியைப் பொருத்தவரை அனைத்து தரப்பு மக்களும் என்னை சகோதரனாகவும், குடும்ப உறுப்பினராகவும் கருதி வெற்றி ஈட்டி தந்துள்ளனா். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. கூட்டணியைப் பொருத்தவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை பொறுப்பேற்று நடத்தவுள்ளாா். கூட்டணிக் கட்சிகள் ஒருமுகமாக இணைந்து 234 தொகுதிகளிலும் உழைப்பதற்குத் தயாராக உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, மாநில வா்த்தக அணி செயலாளா் சிந்து ரவிசந்திரன், நம்பியூா் ஒன்றியச் செயலாளா் தம்பிசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.