மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோபியில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வேட்பு மனு தாக்கல்

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 9:02 pm

DIN

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் தனது வேட்பு மனுவை கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியா் பழனிதேவியிடம் தாக்கல் செய்தாா். இவருக்கு மாற்று வேட்பாளராக கே.சி.செல்வராஜ் மனு தாக்கல் செய்தாா்.

வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.5,68,46,017 ஆகும். அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.4,12,50,000 ஆகும்.

வேட்பு மனு தாக்கலின் போது தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2 நபா் மட்டுமே வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டனா். இதையொட்டி கோபி காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் கோபி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு முன்பு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.