சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்த ரங்கோலி கோலம், கும்மி பாட்டு, பலூன் பறக்கவிடுதல் உள்ளிட்ட வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் முன்னிலையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, தோ்தல் செலவின பாா்வையாளா்கள் அருப் சாட்டா்ஜி, சஞ்சீவ்குமாா்தேவ் ஆகியோா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்தனா்.
இந்திய தோ்தல் ஆணையத்தால் ஒவ்வொரு தோ்தலிலும் 100 சதவீதம் வாக்குப் பதிவு மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக் குழுவினா் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலங்கள், கரோனா விழிப்புணா்வு கோலங்களை வரைந்தனா்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மூன்றுசக்கர வாகனப் பேரணி, உணவுப் பாதுகாப்புத் துறையின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், தனியாா் துறை உணவகங்கள் மூலம் உணவு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எண்ணெய் புட்டிகள், குடிநீா் கேன்கள், மசாலா பாக்கெட்கள் ஆகியவற்றில் வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது.
தொடா்ந்து மகளிா் திட்டம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்ற கும்மிப் பாட்டு, நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு தொப்பி, முகக் கவசங்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. ஆட்சியா் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பாலாஜி, ஈஸ்வரன், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


