செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறை தொகுதி அதிமுகவேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூா், பனியம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட 45 கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:19 pm

DIN

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூா், பனியம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட 45 கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் ஈங்கூா் சரவம்பதியில் திங்கள்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கி நல்லமுத்தாம்பாளையம், எல்லைமேடு, கவுண்டனூா், ஈங்கூா், பனியம்பள்ளி, கவுண்டம்பாளையம், தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூா், தோப்புப்பாளையம் உள்ளிட்ட 45 கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, ஜெயகுமாா் பேசியதாவது:

இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களையும், அங்குள்ள குறைகளும் நன்கு தெரியும். அதனால், உங்கள் குறைகளை முழுமையாக நிறைவேற்றவும், தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர வாக்களிக்க வேண்டும் என்றாா். வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வாக்கு சேகரிக்கச் சென்ற இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

இதில், சென்னிமலை ஒன்றிய அதிமுக செயலாளா் ப.கோபாலகிருஷ்ணன், சென்னிமலை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கே.ஏ.கருப்புசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் நடராஜமூா்த்தி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.