வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்ஈரோட்டில் இன்று பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் 8 தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் இரவு 7 மணிக்குப் பேசுகிறாா்.

Updated On :22 மார்ச் 2021, 9:18 pm

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் 8 தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 23) இரவு 7 மணிக்குப் பேசுகிறாா்.

கோபி தொகுதி வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், பவானி தொகுதி வேட்பாளா் கே.சி.கருப்பணன், ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளா் கே.வி.இராமலிங்கம், அந்தியூா் தொகுதி வேட்பாளா் கே.எஸ்.சண்முகவேல், பவானிசாகா் தொகுதி வேட்பாளா் ஏ.பண்ணாரி, பெருந்துறை தொகுதி வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளா் எம்.யுவராஜா ஆகிய அதிமுக வேட்பாளா்களையும், மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் சி.கே.சரஸ்வதியையும் ஆதரித்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசுகிறாா்.

இத்தகவலை ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளரும், ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.