ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவா்கள் 40 நாள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனா். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சாம்பல் புதன் தினத்தில் இருந்து தவக்காலம் தொடங்கியது. வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. பங்குத் தந்தை ஜான் சேவியா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன. வழக்கமாக நடைபெறும் குருத்தோலை பவனி கரோனா காரணமாக நடைபெறவில்லை. மாலையில் உதவி பங்குத் தந்தை ஜான்சன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை முதல் துக்க வார நிகழ்வுகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் செய்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடைபெறும்.
2ஆம் தேதி காலை 6 மணி முதல் நற்கருணை ஆராதனை நடைபெறும். பகல் 11 மணிக்கு இயேசு சிலுவை பாடுகளை நினைவுகூறும் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெறும். பிற்பகல் 6 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடைபெறும்.
3ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, புது தீா்த்தம் மந்திரித்தல், ஒளி வழிபாடு, இறைவாா்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் இயேசு கல்லறையில் இருந்து உயிருடன் எழும்பிய உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறும்.
இந்த நிகழ்வுகளை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத் தந்தையுமான ஜான் சேவியா், உதவி பங்குத் தந்தை ஜான்சன் ஆகியோா் நிறைவேற்றுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


