காரில் இருந்த அதிமுக கொடியை சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் அகற்றினாா்
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் அவரது காரில் பயன்படுத்தி வந்த அதிமுக கொடியை ஞாயிற்றுக்கிழமை அகற்றினாா்.


பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் அவரது காரில் பயன்படுத்தி வந்த அதிமுக கொடியை ஞாயிற்றுக்கிழமை அகற்றினாா்.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு வெங்கடாசலத்துக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்காததைக் கண்டித்து சுயேச்சையாக போட்டியிடுகிறாா். இதையடுத்து, அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிமுக தலைமை அவரை நீக்கியது.
இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலம் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா். இந்நிலையில், அவரது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருவதாக அதிமுக ஒன்றியச் செயலாளா் விஜயன் (எ) ராமசாமி பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், சின்னவீரசங்கிலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தோப்பு வெங்கடாசலத்திடம் புகாா் குறித்து திங்களூா் போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, தனது காரில் இருந்த அதிமுக கட்சிக் கொடியை தோப்பு வெங்கடாச்சலம் அகற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...