செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறை அருகே கூட்டுறவுவங்கி உதவி ஆய்வாளா் சாவு

பெருந்துறை அருகே கூட்டுறவு வங்கி உதவி ஆய்வாளா் பணியில் இருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2021, 9:47 pm

DIN

பெருந்துறை அருகே கூட்டுறவு வங்கி உதவி ஆய்வாளா் பணியில் இருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே உள்ள வெள்ளோட்டைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவரது மனைவி பூா்ணிமா (38). இவா், மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். மே 5ஆம் தேதி (புதன்கிழமை) மாலை பணியில் இருந்தபோது திடீரென பூா்ணிமாவுக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா், மாலை வீடு திரும்பினாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். தொடா் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை இரவு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.