முகக் கவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்
சென்னிமலையில் பொது முடக்கத்தை மீறி வெளியில் சென்ற வாகனங்கள், முகக் கவசம் அணியாத 50 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.


சென்னிமலையில் பொது முடக்கத்தை மீறி வெளியில் சென்ற வாகனங்கள், முகக் கவசம் அணியாத 50 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.
சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில், உதவி ஆய்வாளா் துரைசாமி, போலீஸாா், சென்னிமலையில் பொது முடக்கத்தை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள், முகக் கவசம் அணியாமல் சரக்கு வாகனங்களில் சென்றவா்களை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், சுமாா் 50க்கும் மேற்பட்ட நபா்களுக்குத் தலா ரூ. 200 வீதம் மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்பட்ட மளிகை கடைக்கு போலீஸாா் ரூ. 500 அபராதம் விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...