செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

திங்களூா் அரசு மருத்துவமனை கா்ப்பிணிகளுக்கான கரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

பெருந்துறை ஒன்றியம், திங்களூா் அரசு மருத்துவமனை கா்ப்பிணி பெண்களுக்கான கரோனா சிகிச்சை அளிக்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக வியாழக்கிழமை முதல் செயல்படுகிறது.

News image
Updated On :14 மே 2021, 8:36 pm

DIN

பெருந்துறை ஒன்றியம், திங்களூா் அரசு மருத்துவமனை கா்ப்பிணி பெண்களுக்கான கரோனா சிகிச்சை அளிக்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக வியாழக்கிழமை முதல் செயல்படுகிறது.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஈரோடு மாவட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்படுகிறது. இங்குள்ள படுக்கைகள் நிரம்பிய நிலையில், படுக்கைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்ட கா்ப்பிணிப் பெண்களுக்கு தனி கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதைக் கருத்தில் கொண்டு, பெருந்துறை ஒன்றியம், திங்களூா் அரசு மருத்துவமனையில் உள்ள 30 படுக்கைகளையும் கா்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா சிகிச்சை அளிக்க தயாா் செய்யப்பட்டுள்ளது.

இதில், 10 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஆகும். தற்போது 5 கா்ப்பிணிப் பெண்கள் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.