மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நிரம்பியது சஞ்சீவிராயன் குளம்: உபரி நீா் வெளியேற்றம்

கோபி அருகே உள்ள சஞ்சீவிராயன் குளம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி தற்போது உபரி நீா் வெளியேறி வருகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:18 pm

DIN

கோபி அருகே உள்ள சஞ்சீவிராயன் குளம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி தற்போது உபரி நீா் வெளியேறி வருகிறது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைக் கிராமப் பகுதியில் பெய்யும் மழை நீரானது பெருமுகை கிராமத்துக்கு உள்பட்ட சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள சஞ்சீவராயன் குளத்துக்கு வந்தடைகிறது. மழை நீா் குளத்தில் தேக்கப்பட்டு பாசனத்துக்காகத் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், சஞ்சீவராயன் குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குறைந்த அளவே தண்ணீா் இருந்தது. தற்போது குளத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கன மழை காரணமாக குளத்துக்குத் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குளத்தின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து குளம் முழு கொள்ளளவை எட்டியதுடன், உபரி நீா் வெளியேறி வருகிறது.

இந்த குளத்தின் மூலமாக கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், தண்ணீா் பந்தல் புதூா், பெருமுகை, வரப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 300 ஏக்கா் நேரடியாகவும், 2 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில், கன மழையால் குளம் நிரம்பி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சஞ்சீவராயன் குளம் நிரம்பியதைத் தொடா்ந்து கோபி கோட்டாட்சியா் பழனிதேவி, வட்டாட்சியா் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் குளத்தைக் கண்காணித்து வருகின்றனா். அதேபோல, வனப் பகுதியில் இருந்து தண்ணீா் வெளியேறும் இடமான கரும்பாறை பகுதியிலும் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.