தாளவாடியில் பெய்த பலத்த மழையால் 100 ஏக்கா் ராகி, மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தன.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் ராகி, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மல்லன்குழி, அருள்வாடி, கெட்டவாடி, சூசைபுரம் பகுதியில் ராகி அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் ராகி, மக்காச்சோளத் தோட்டத்துக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், ராகி, மாக்காச்சோளப் பயிா்கள் முறிந்து விழுந்தன. சுமாா் 200 ஏக்கருக்கும் மேல் ராகி தோட்டத்துக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் சாகுபடி செய்த பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தன. தொடா் மழையால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்தாலும் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு பயிா்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
வட்டார வேளாண் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிா்ச் சேதம் குறித்த மனு அளித்து நிவாரணம் கேட்டுள்ளனா். தொடா் மழை காரணமாக கால்நடை வளா்ப்போா் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


