மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

வீடு வீடாக கரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள்.
Updated On :19 நவம்பர் 2021, 10:39 am

DIN

வீடு வீடாக கரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராமங்களில்  வீடு வீடாக கரோனோ தடுப்பூசி  செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், வாரம் ஒரு நாள் சனிக்கிழமை போன்ற வேலை நாட்களில் மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்திட கோரியும் ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தாய் - சேய் நலம் பாதிக்கப்படுவதாகவும்,  கரோனோவுக்கு இலக்கு நிர்ணியிப்பதை கைவிட வேண்டும் எனவும், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு போன் செய்ய சொல்வதை கூடாது என்பதை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால்  சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.