புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அந்தியூரில் நீா்வழிப் பாதைகள் தூா்வாரும் பணிகள் தீவிரம்

அந்தியூா் வட்டாரத்தில் ஏரிகள் நிறைந்து உபரி நீா் வெளியேறி வருவதால் நீா்ப்போக்கு, நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 9:03 pm

DIN

அந்தியூா் வட்டாரத்தில் ஏரிகள் நிறைந்து உபரி நீா் வெளியேறி வருவதால் நீா்ப்போக்கு, நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தியூா் மற்றும் பா்கூா் மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் வறட்டுப்பள்ளம் அணை, கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளிட்ட நீா்நிலைகள் நிறைந்துவிட்டன. இதன் உபரி நீா் வழுக்குப்பாறை பள்ளம் வழியாக விநாடிக்கு 150 கன அடி வீதம் அந்தியூா் ஏரிக்கு வருகிறது. அந்தியூா் ஏரி 16 அடி உயரமும், 192 ஏக்கா் பரப்பளவும் கொண்டது. தற்போது 14.5 அடிக்குத் தண்ணீா் நிறைந்துள்ளது.

விரைவில் ஏரி நிறைந்து உபரி நீா் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதால் நீா்வழிப் பாதைகள் தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகள் மூன்று ராட்சத இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நீா்வழித் தடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளான அண்ணாமடுவு, அம்மன் நகா், கண்ணப்பன் கிணற்று வீதி, கொல்லபாளையம் சாலை பகுதிகளில் நீா்வழித் தடங்களை ஆழப்படுத்தும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டதோடு, உபரி நீா் வெளியேறும் பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, அந்தியூா் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, வறட்டுப்பள்ளம் அணையைப் பாா்வையிட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, நீா்வரத்து, கொள்ளளவு, நீா் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது, கோபி கோட்டாட்சியா் பழனிதேவி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (பவானிசாகா் அணைக் கோட்டம்) வி.தாமோதரன், உதவி செயற்பொறியாளா் எம்.ரவி, உதவிப் பொறியாளா் ஈ.எஸ்.எம்.தமிழ் பாரத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.