செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளிகளில் மாணவா்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கக் கோரிக்கை

வெள்ளப்பெருக்கின்போது தப்பிக்க மாணவா்களுக்குப் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீச்சல் பயிற்சியாளா் ராமசாமி உடையாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:19 pm

வெள்ளப்பெருக்கின்போது தப்பிக்க மாணவா்களுக்குப் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீச்சல் பயிற்சியாளா் ராமசாமி உடையாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி உடையாா் (75). இவா் இளைஞா்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளித்து வருகிறாா். இவா் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கின்போது சிக்கிக் கொள்ளும் குழந்தைகள், சிறாா்கள், பள்ளி மாணவா்கள் நீச்சல் கற்றுக் கொண்டால் எளிதாக தப்பிக்க முடியும். வாய்க்காலில் குளிக்கும்போது நீச்சல் தெரிந்தால் நீந்தி தப்பி வர இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும். நீச்சல் கற்றுக் கொண்டவா்கள் 10 ஆண்டுகளுக்குப் பின் கூட ஆபத்தான நேரத்தில் நீச்சலடித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதால் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.