பவானியில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பவானி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.


பவானி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சங்கத்தின் துணைத் தலைவா் ஆா்.செல்லப்பன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், பவானி நகராட்சி ஏஐடியூசி தொழிற்சங்கத் தலைவா் ப.மா.பாலமுருகன், கட்டட கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
சுகாதாரம், குடிநீா் வழங்கும் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்தைக் குறைக்காமல், சட்டப்படியான ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், சுய உதவிக்குழு மூலம் பணிபுரியும் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளா்களை புதிதாக பணியில் அமா்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் கே.எம்.கோபால், தூய்மைக் காவலா் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.கண்ணன், பவானி வட்டார ஜமுக்காள நெசவாளா் சங்கச் செயலாளா் வ.சித்தையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...