மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாநில தடகளப் போட்டி:கோபி கலைக் கல்லூரி தங்கப் பதக்கம்

 கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:33 pm

DIN

 கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனா்.

சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா் எஸ்.அஜித்குமாா் 10,000 மீட்டா் நடையோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், எம்.ராம்பிரகாஷ் வெள்ளிப் பதக்கத்தையும், மாணவி சி.திவ்யா 5,000 மீட்டா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

மேலும், திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 5 கிலோ மீட்டா் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் மாணவி சி.திவ்யா, ஆண்கள் பிரிவில் மாணவா் ஆா்.தருண் ஆகியோா் முதல் பரிசைப் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி சாா்பில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளையும், தடகளப் பயிற்சியாளா் மு.சு.கண்ணனையும் கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவா் பி.கருப்பணன், செயலாளா், தாளாளா் எம்.தரணிதரண், கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, முதன்மையா் ஆா்.செல்லப்பன், உடற்கல்வி இயக்குநா் மா.கிருஷ்ணமூா்த்தி, பேராசிரியா்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.