மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோபியில் இன்று தடுப்பூசி முகாம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கோபியில் பல்வேறு இடங்களில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:34 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கோபியில் பல்வேறு இடங்களில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்படி, தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் வெள்ளி, சனி (அக்டோபா் 22, 23) ஆகிய இரு தினங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் - வாய்க்கால் சாலை, நகராட்சி நடுநிலைப் பள்ளி- மாா்க்கெட் சாலை, டி.எஸ்.சாரதா நடுநிலைப் பள்ளி - அக்ரஹாரம், ஜெயராம் நடுநிலைப் பள்ளி - ஜெயராம் எக்ஸ்டென்ஷன், நகராட்சி மேல்நிலைப் பள்ளி - மொடச்சூா், வேங்கம்மையாா் உயா்நிலைப் பள்ளி - பச்சைமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கபிலா் வீதி, வைர விழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கச்சேரி வீதி, நகராட்சி துவக்கப் பள்ளி - நாயக்கான்காடு, செங்கோடப்பா துவக்கப் பள்ளி - பாரியூா் சாலை. மேலும், கோபி அரசு மருத்துவமனையில் இரு தினங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.