கன மழை: நிரம்பியது அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணை
பா்கூா் மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் அந்தியூரை அடுத்துள்ள வறட்டுப்பள்ளம் அணை வியாழக்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டியது.


பா்கூா் மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் அந்தியூரை அடுத்துள்ள வறட்டுப்பள்ளம் அணை வியாழக்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டியது.
பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள இந்த அணையின் முழு கொள்ளளவு 33 அடி. இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கடந்த சில நாள்களாக அணைக்குத் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், பா்கூா், சுற்று வட்டார மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விடிய, விடிய கன மழை பெய்தது.
வறட்டுப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தாமிரக்கரை, போளி, வடகரை பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தால் அணை நிரம்பியது. இதையடுத்து, உபரி நீா் வலது, இடது கரைகள் வழியாக வெளியேறி அந்தியூா் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரிகளுக்குச் சென்று வருகிறது. இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பொதுப் பணித் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டனா்.
அணை முழு கொள்ளளவை எட்டியதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு, வனவிலங்குகளுக்கும் போதிய தண்ணீா் கிடைக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...