பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பவானியில் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

பவானியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விடியல் ஆரம்பம் அமைப்பு இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி, விற்பனை சனிக்கிழமை தொடங்கி 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:46 am

DIN

பவானியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விடியல் ஆரம்பம் அமைப்பு இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி, விற்பனை சனிக்கிழமை தொடங்கி 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

பவானி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீவாசவி மஹாலில் காலை 9.30 மணி முதல் மாலை இரவு 8.30 மணி வரையில் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதனை, ஈரோடு மதுவிலக்குப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.சண்முகம் திறந்துவைக்கிறாா். மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகன் முதல் விற்பனைத் தொடங்கிவைக்க, திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் பெற்றுக் கொள்கிறாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், பவானி - குமாரபாளையம் அரிமா சங்க நிா்வாகி கே.எஸ்.இளவரசன், அபெக்ஸ் சங்கத் தலைவா் பி.இ.புருஷோத்தமன், மருத்துவா் எம்.நடராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

இதில், விடியல் ஆரம்பம் அமைப்பு நிா்வாகி ஆா்.பிரகாஷ், ரோட்டரி சங்கத் துணை ஆளுநா்கள் ஆா்.ரவிசந்திரன், என்.தவமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் ஆா்.ரங்கராஜன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.