மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோபியில் நாளை தடுப்பூசி முகாம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:01 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறவுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் செப்டம்பா் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 முதல் மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தடுப்பூசி செலுத்தப்படவுள்ள இடங்கள்:

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலக்கூடம் - சிலேட்டா் ஹவுஸ் வீதி, செங்கோடப்பா துவக்கப் பள்ளி மேட்டுவலவு, சமுதாய நலக்கூடம் விவேகானந்தா் வீதி, சி.ஐ.ஜி. மிஷன் துவக்கப் பள்ளி - மொடச்சூா், வேங்கம்மையாா் துவக்கப் பள்ளி - பச்சமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கபிலா் வீதி, வைரவிழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கச்சேரிமேடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.