ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரோட்டில் அனைத்துக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்

வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

News image
ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினர்.
Updated On :27 செப்டம்பர் 2021, 7:54 am

DIN

வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காளைமாட்டுச்சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதையடுத்து ரயில் நிலையம் முன்பாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.