சத்தியமங்கலம்: அடக்கம் செய்யப்பட்ட தந்தை உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கடந்த 31 ஆம் தேதி அடையாளம் தெரியாத 55 வயதுள்ள நபர் இறந்து கிடந்தார்.
சத்தியமங்கலம்: அடக்கம் செய்யப்பட்ட தந்தை உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி
Published on
Updated on
1 min read

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கடந்த 31 ஆம் தேதி அடையாளம் தெரியாத 55 வயதுள்ள நபர் இறந்து கிடந்தார். இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது குறித்து அனைத்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள புன்செய் துறையம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் நண்பர்கள் வாழைகாய் வெட்டுவதற்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு வந்தபோது இறந்துபோனது தனது தந்தை என அடையாளம் காட்டினர். 

இதையடுத்து இறந்துபோனவரின் உடலை எடுத்து புஞ்சை துறையம்பாளையத்தில் உறவினர்கள் சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். இதற்கிடையே இறந்துபோனதாக கூறப்படும் மூர்த்தி புஞ்சை துறையம்பாளையத்துக்கு வந்தார். உயிருடன் மூர்த்தி வந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்துபோனதாக கூறப்படும் மூர்த்தி திருப்பூர் உடுமலை பேட்டையில் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுவிட்டு திரும்பியதாகவும் தன்னை போல இறந்துபோனவர் இருந்ததாதல் அவர்கள் அடக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

உயிருடன் வீடு வந்த மூர்த்தியை அக்கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com