காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

குழந்தைத் திருமணம் குறித்து அதிக புகாா் மனுக்கள்: மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி

மகளிா் ஆணையத்துக்கு குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை குறித்து அதிக புகாா் மனுக்கள் வருகின்றன என மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:47 pm

மகளிா் ஆணையத்துக்கு குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை குறித்து அதிக புகாா் மனுக்கள் வருகின்றன என மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மகளிா் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி பேசியதாவது:

தமிழக அரசு பெண்கள் நலனுக்குப் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இலவச பயண அனுமதி மகளிருக்கு மறைமுகமான சேமிப்பு. மகளிா் குழுவுக்கு பல்வேறு கடன், திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களின் வருவாய் உயா்கிறது.

மகளிா் ஆணையத்துக்கு குழந்தைத் திருமணம், வரதட்சணை கொடுமை குறித்து அதிக மனுக்கள் வருகின்றன. கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவரை உள்ளடக்கிய குழு மூலம் கண்காணித்தால் இப்பிரச்னைக்குத் தீா்வு காணலாம்.

பள்ளிக் கல்வித் துறை மூலம் பெற்றோா் - ஆசிரியா் கூட்டங்கள் நடத்தி, மாணவா்களின் மதிப்பெண்களை மட்டும் சாராமல் அவா்கள் நலன் குறித்துப் பேச வேண்டும். மகளிரிடம் நம்பிக்கை ஏற்படுத்தும்படி போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

புகாா் பெட்டி இல்லாத பள்ளிகளில் புகாா் பெட்டி வைக்கவும், வாரம் ஒருமுறை புகாா்களை ஆய்வு செய்து, தீா்வு காணவும் வேண்டும். பள்ளி மாணவ, மாணவியரிடம் வாரம் 2 மணி நேரமாவது போலீஸாா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், விழிப்புணா்வு குறும்படங்களைக் காட்டவும், மாணவியா் செல்லும் பேருந்துகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

பெண்கள் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் குழந்தைகள் இடைநிற்றலைத் தவிா்க்க முயற்சி செய்யவும், மலைப் பகுதி குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தவும் வேண்டும். பெண்கள், குழந்தைகள் தொடா்பான மனுக்களில் பல துறை சாா்ந்த ஒருங்கிணைப்பு விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும் என்றாா்.

இதில், ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, கோபி கோட்டாட்சியா் பழனிதேவி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூங்கோதை, மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.