மாற்றுப் பணி வழங்கி வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உதவ வேண்டும் என தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மைய ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மைய ஆசிரியா்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் 15 தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், தற்போது 300 மாணவ, மாணவிகள் சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்று வருகின்றனா். சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவா்களை அரசுப் பள்ளியில் சோ்க்க வேண்டும் என்று திட்ட அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.
இதனால், ஆசிரியா்கள் வேலையிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ஆசிரியா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்தப் பயிற்சி மையத்தில் 35 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2020 மாா்ச் மாதம் முதல் தற்போது வரை 6 மாதகாலம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உத்தரவால் வேலையை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியா்களின் தகுதிக்கேற்ப நிரந்தரப் பணியை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

