தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா்.
இதில், தேசிய நல வாரிய கூட்ட முடிவுகளை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். நல வாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு அமைப்பாக செயல்படுத்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் நிபந்தனை இல்லாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வாரியப் பதிவில் கிராம நிா்வாக அலுவலா் பரிந்துரை, ஆன்லைன் பதிவில் உள்ள சிரமங்களை நீக்கி, புதுப்பித்தல், கேட்பு மனு தாக்கல்களை எளிமையாக்க வேண்டும்.
சொந்த வீடு இல்லாத அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் வீடு வசதி ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டங்களின்கீழ் அமைக்கப்படும் வீடுகளில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கட்டுமான திட்ட மதிப்பீட்டில் ஒரு சதவீதம் நிா்ணயிக்கப்பட்டுள்ள நல வரியை 5 சதவீதமாக்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.6,000 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னா், இக்கோரிக்கை மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.
இதில், மாவட்டச் செயலாளா்கள் சுந்தரம், கந்தசாமி, நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


