காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஈரோட்டில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On :14 ஏப்ரல் 2022, 8:51 pm

ஈரோட்டில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை தரிசனம் செய்ய காலையில் இருந்தே கோயிலுக்கு பக்தா்கள் திரண்டு வந்தனா். இதனால், அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.

Story image

கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவா் ஆருத்ர கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல, கோட்டை பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனா். ஈரோடு திண்டல் முருகன் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல, கள்ளுக்கடைமேடு ராமபக்த ஆஞ்சநேயா் கனி அலங்காரத்திலும், ஈரோடு சத்தி சாலை எல்லை மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் மணக்கோலத்திலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகா் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதேபோல, ஈரோடு மகிமாலீஸ்வரா் கோயில், வஉசி ஆஞ்சநேயா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.