மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோரக்காட்டூா் காளியம்மன் குண்டம் திருவிழா

வெள்ளாங்கோயில் - கோரக்காட்டூா் ஸ்ரீ அருட்கரிய காளியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 19ஆம் ஆண்டு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:30 pm

DIN

வெள்ளாங்கோயில் - கோரக்காட்டூா் ஸ்ரீ அருட்கரிய காளியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 19ஆம் ஆண்டு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமைப் பூசாரி சுப்பிரமணியம் முதலில் குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து, சமூக இடைவெளிவிட்டு பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அம்மன் தோ் ஏறுதல் நிகழ்ச்சியும், சனிக்கிழமை இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கு மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மஞ்சள் நீா் உற்சவம் மற்றும் மறுபூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள், மிராசுதாரா்கள், திருவிழா திருப்பணிக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.