மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தோ்தல் விதிமுறை மீறல்: கோபியில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

கோபி பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:30 pm

DIN

கோபி பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் படையினா் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி, கோபி பச்சைமலை குப்பாண்டாா் வீதி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் தோரணவாவி பகுதியைச் சோ்ந்த விவசாயியான முருகையன் (54) என்பதும், இவா் காா் வாங்குவதற்காக ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்தை கோபிக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா். ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதைத்தொடா்ந்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், பணம் கோபி நகராட்சி உதவி தோ்தல் அலுவலா் சோழராஜுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கோபி பகுதியில் 2 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற வாகன சோதனையில், 3 பேரிடம் இருந்து மொத்தம் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.