ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாளை 496 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

முகாம்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 8:27 pm

முகாம்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி, 15 முதல் 18 வயது வரை உள்ள நபா்களுக்கு கோவேக்ஸின் வகை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவா்களில் ஏற்கெனவே இரு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் பூா்த்தியடைந்தவா்கள் தகுதியுடையவா்களாவா். முகாம்களில் இந்த தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர வியாழக்கிழமைதோறும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.