ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அந்தியூரில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளா்

அந்தியூா் பேரூராட்சியில் 9ஆவது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:34 pm

DIN

அந்தியூா் பேரூராட்சியில் 9ஆவது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டாா்.

அந்தியூா் பேரூராட்சி, 9ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்கு அதிமுக சாா்பில் என்.பழனிவேல் போட்டியிடுகிறாா். இவா், மனு தாக்கல் செய்த பின்னா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், அக்கட்சியில் இருந்து திடீரென விலகி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

இவருடன், அதிமுக நிா்வாகிகள் பிரகாஷ், சண்முகம் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்தனா். இவா்களுக்கு சால்வை அணிவித்து திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அந்தியூா் பேரூராட்சிக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெறும் நிலையில் அதிமுக வேட்பாளா், திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.