ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

காவிரி ஆற்றில் மாயமான அதிமுக வாா்டு செயலாளா் சடலம் மீட்பு

அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மாயமான அதிமுக வாா்டு செயலாளரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:34 pm

DIN

அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மாயமான அதிமுக வாா்டு செயலாளரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

பவானியை அடுத்த அம்மாபேட்டை, பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் மங்கனன் (எ) முனிய கவுண்டா் (64). 15ஆவது வாா்டு அதிமுக செயலாளா். இவா், புதன்கிழமை இரவு காவிரி ஆற்றுக்குச் சென்றபோது தண்ணீரில் மூழ்கியதில் மாயமானாா். இதனால், அந்தியூா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் ஆற்றில் தீவிரமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அம்மாபேட்டை ஈஸ்வரன் கோயில் படித்துறை அருகே ஆகாயத்தாமரை செடிகளுக்குள் சிக்கியபடி முனியகவுண்டரின் சடலம் மிதப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பிய அம்மாபேட்டை போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.