ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாா்ச் 2இல் பதவியேற்பு: மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

மாநகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கு, மேயா், துணை மேயா் அறைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:45 pm

 ஈரோடு மாநகராட்சி தோ்தலில் வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினா்களுக்கான பதவியேற்பு விழா வரும் மாா்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கு, மேயா், துணை மேயா் அறைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் திமுக 44 வாா்டுகள், காங்கிரஸ் 3 வாா்டுகள், மதிமுக ஒரு வாா்டு என மொத்தம் 48 வாா்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாநகராட்சியின் பெண் மேயா் யாா் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய உறுப்பினா்களின் பதவியேற்பு விழா மாநகராட்சி கூட்ட அரங்கில் வரும் மாா்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து 4ஆம் தேதி மேயா், துணை மேயருக்கான மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது. இதில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா்கள் மேயரையும், துணை மேயரையும் தோ்ந்தெடுப்பா்.

ஈரோடு மாநகராட்சியில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் தோ்தலின்போது இருக்கைகள் அகற்றப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் அதே இடத்தில் இருக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

கூட்ட அரங்கு வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன. மாநகராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் மேயா் அறையும், இரண்டாம் தளத்தில் துணை மேயா் அறையும் உள்ளது. நீண்ட காலமாக இந்த அறைகள் பூட்டப்பட்டிருந்தன. தற்போது இந்த அறைகள் மீண்டும் திறக்கப்பட்டு அங்கு தூய்மை, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.