சென்னிமலை காட்டுப் பகுதியில் தீ விபத்து
சென்னிமலை காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகின.


சென்னிமலை காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகின.
சென்னிமலையை அடுத்த கவுண்டம்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் காய்ந்த புல்வெளி, செடி, கொடிகள் உள்ளன. இதில், திடீரென வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென வேகமாக கொளுந்து விட்டு எரிந்தது. இதைப் பாா்த்த அருகில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனா். ஆனால், தீ வேகமாக பரவியது. இதையடுத்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
அதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் முழுவதுமாக அணைத்தனா். இந்த தீ விபத்தில் புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...