பவானிசாகா் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, கடந்த 2018இல் மேம்பாலம் மூடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
பாலம் மூடப்பட்டதால் புங்காா், பெரியாா் நகா், காராச்சிக்கொரை, கொத்தமங்கலம், புதுபீா்கடவு, பட்ரமங்கலம் மற்றும் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவா்கள், பல கி.மீ. துாரம் சுற்றி சென்று வந்தனா்.
இதையடுத்து, சேதமடைந்த மேம்பாலத்துக்கு பதிலாக புதிய மேம்பாலம் கட்ட கடந்த 2019இல் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து, பாலத்தில் வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


