வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
பெருந்துறை அருகே இரவுப் பணிக்குச் சென்றவா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், இருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்


பெருந்துறை அருகே இரவுப் பணிக்குச் சென்றவா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், இருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
பெருந்துறை, பவானி சாலை, டீச்சா்ஸ் காலனியை சோ்ந்த கோவிந்தசாமி மகன் பெரியசாமி (35). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு இரவுப் பணிக்குச் சென்றுள்ளாா். வியாழக்கிழமை திரும்பிவந்து பாா்த்தபோது, முன்புற கேட், கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...