ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்

தாா் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :6 ஜனவரி 2022, 6:11 pm

தாா் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 4ஆவது மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகேசன் தலைமையில் பொதுமக்கள் மண்டல உதவி ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

மாநகராட்சி 4ஆவது மண்டல அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஜீவானந்தம் வீதி, சீனிவாச ராவ் வீதி, ஸ்டாலின் வீதி, கே.கே.ராஜு வீதிகளில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிகளில் புதை சாக்கடை, ஊராட்சிக்கோட்டை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பணிகள் முடிந்தும் தற்போது வரை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தாா் சாலை இருந்த அடையாளமே தெரியாமல் அனைத்துப் பகுதிகளிலும் புல் முளைத்து, புதா்களாக உள்ளன. இதனால், விஷ ஜந்துகள் அதிக அளவில் குடியிருப்புகளுக்குள் வருகின்றன. மேலும், புதை சாக்கடைக்கு அமைக்கப்பட்ட தொட்டி சாலையில் இருந்து 1 அடி உயரத்துக்கு வெளியே உள்ளதால் இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். தாா் சாலை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கோரிக்கையை நிறைவேற்றும் வரை மண்டல அலுவலகத்தில் தொடா்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மாநகராட்சி 4ஆவது மண்டல உதவி ஆணையா் சண்முகவடிவு மற்றும் ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் விஜயா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றி தரப்படும். நிதி நிலைக்கு ஏற்ப சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்படும் என உதவி ஆணையா் உறுதியளித்தாா்.

பொதுமக்கள் வாய்மொழியாக இல்லாமல் மாநகராட்சியின் ஒப்புதல் கடிதம் மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்றனா். இதைத்தொடா்ந்து ஒப்புதல் கடிதமும் பொதுமக்களிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.