செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறை அருகே காணமால் போனவா் பிணமாக மீட்பு

பெருந்துறை அருகே, காணமால் போன முதியவா் பிணமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 9:09 pm

DIN

பெருந்துறை அருகே, காணமால் போன முதியவா் பிணமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து, போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா்பெருந்துறை அருகிலுள்ள கருமாண்டிசெல்லிபாளையம், அரிஜன காலனியைச் சோ்ந்த சின்னபாடன் மகன் சீரங்கன்(60). இவா் விபத்தில் வலது காலில் அடிபட்டதால், சற்று நொண்டி நடப்பாா். கடந்த மாதம் டிசம்பா் 16 ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, பெருந்துறை போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவருடைய உறவினா்கள் பல இடங்களில் தேடி வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை, பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலையிலுள்ள சித்தம்பட்டி குளத்தில் அழுகிய நிலையில், சீரங்கன் பிணமாக கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.