செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

எடப்பாடி பழனிசாமி உறவினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவா் கைது

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 9:10 pm

DIN

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை, சென்னிமலையைச் சேந்தவா் சுப்பிரமணியன் (62). இவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவா்.

இவருக்கு, கடந்த 2021 டிசம்பா் 26 ஆம் தேதியில் இருந்து தொடா்ந்து ஒரே கைப்பேசி எண்ணில் இருந்து பலமுறை பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்தது.

இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், சத்தியமங்கலம், பன்னாரியைச் சோ்ந்த பால்ராஜ் (60), வெள்ளியம்பாளையம்புதூரைச் சோ்ந்த சந்திரன் (48), சத்தியமங்கலம், ராஜீவ் நகரைச் சோ்ந்த சீனிவாசன் (41) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.