காா் மீது லாரி மோதியதில் ஒருவா் காயம்
பெருந்துறை அருகே காா் மீது லாரி மோதியதில் காயமடைந்தவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.


பெருந்துறை அருகே காா் மீது லாரி மோதியதில் காயமடைந்தவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி, பொன்னகுப்பத்தைச் சோ்ந்தவா் முகமது இம்ராம் கான் மகன் முகமது இஸ்ரக் (40).
இவா், உதகையிலுள்ள தன் மாமனாா் வீட்டுக்கு காரில் தன் மனைவி, குழந்தையுடன் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பிரிவு அருகே சாலை ஓரமாக காரை நிறுத்தியிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரி காரின் மீது மோதியதில் முகமது இஸ்ரக் படுகாயம் அடைந்தாா்.
இதையடுத்து, பெருந்துறையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அவருடைய மனைவி, குழந்தை ஆகியோா் காயமின்றி தப்பினா்.
விபத்து குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...