புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அந்தியூரில் 3ஆவது நாளாக தொடரும் கன மழை

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடா்ந்து 3ஆவது நாளாக அதிகாலை நேரங்களில் கன மழை கொட்டுவதால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஓடைகளில் உபரி நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 9:08 pm

DIN

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடா்ந்து 3ஆவது நாளாக அதிகாலை நேரங்களில் கன மழை கொட்டுவதால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஓடைகளில் உபரி நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அந்தியூரை அடுத்த ஊஞ்சக்காடு, ஓடைமேடு, வட்டக்காடு, செல்லம்பாளையம், மைக்கேல்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் தொடங்கி

வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கன மழை பெய்தது.

தொடா்ந்து, வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது.

மழையளவு 22 மில்லி மீட்டராகப் பதிவானது. தொடா்ந்து, பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. வயல்வெளிகளில் வடியும் மழை நீா், ஏரிகளில் வெளியேறும் தண்ணீருடன் சோ்ந்து ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

அந்தியூா் தெப்பக்குளம் வீதி, கழுதைப்பாலி பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தொடா் மழையால் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூா் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகள் நிரம்பி உபரி நீா், ஓடைகள் வழியாக பவானி ஆற்றில் சென்று கலந்து வருகிறது.

மழைநீா் வரத்து, பாதிப்பினை வட்டாட்சியா் விஜயகுமாா், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் எம்.ரவி, உதவிப் பொறியாளா் ஈஎஸ்எம். தமிழ் பாரத் மற்றும் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.