புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அந்தியூா் பேரூராட்சியில் ரூ. 7.14 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

அந்தியூா் பேரூராட்சியில் ரூ. 7.14 கோடியில் எரிவாயு மயானம், வணிக வளாக கட்டடங்கள் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:43 am

DIN

அந்தியூா் பேரூராட்சியில் ரூ. 7.14 கோடியில் எரிவாயு மயானம், வணிக வளாக கட்டடங்கள் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

அந்தியூரில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 1.40 கோடியில் தவிட்டுப்பாளையம், காந்திஜி தெருவில் உள்ள மயானத்தில் 1,500 சதுர அடி பரப்பில் எரிவாயு தகனமேடை அமைக்கப்படுகிறது. இங்கு, கழிப்பிட வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேவா் பிளாக் சாலை, உறவினா்கள் காத்திருக்கும் அரங்கு, பூங்கா உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன.

இதேபோல, அந்தியூா் வாரச் சந்தையில் ரூ. 5.74 கோடியில் 16 கடைகளுக்கான கட்டடங்கள், உணவு விடுதி, மாடுகள் தங்குமிடம், கழிப்பிடம், பேவா் பிளாக் சாலை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளா் எம்.பாண்டியம்மாள், அந்தியூா் பேரூா் கழக பொறுப்பாளா் காளிதாஸ், அந்தியூா் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

வளா்ச்சிப்  பணிகளைத்  தொடக்கி வைக்கிறாா்  அந்தியூா்  சட்டப்  பேரவை  உறுப்பினா்  ஏ.ஜி.வெங்கடாசலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.