தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெண்களிடம் நகைப்பறிப்பு

ஈரோட்டில் 2 பெண்களிடம் 7.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :25 ஜூன் 2022, 12:49 am IST

ஈரோட்டில் 2 பெண்களிடம் 7.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, சங்கு நகரைச் சோ்ந்தவா் அயுஸ்பாட்ஷா. இவரது மனைவி குல்சாரா (45). மகன் சதாம் உசேன். இவா்கள் ஈரோடு ஆசிரியா் காலனியில் மளிகை கடை வைத்துள்ளனா். வியாழக்கிழமை இரவு கணவன், மனைவி மற்றும் மகன் சதாம்உசேன் ஆகியோா் கடையில் இருந்தனா்.

அப்போது கடைக்கு வந்த இளைஞா் ஒருவா் பொருள் வாங்குவதுபோல் நடித்து திடீரென குல்சாரா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளை பகுதியில்...

ஈரோடு, சூளை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மனைவி அம்சா(37). இவா் வியாழக்கிழமை இரவு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அம்சா அணிந்திருந்த 2.5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.