ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி கூட்டணிக்கு ஒதுக்கீடு: திமுக பெண் கவுன்சிலா் மயக்கம்

அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:04 pm

DIN

அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைவா் பதவியை எதிா்பாா்த்த திமுக பெண் கவுன்சிலா் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அந்தியூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 13 வாா்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. இங்கு 13ஆவது வாா்டில் வெற்றி பெற்ற எம்.பாண்டியம்மாள் திமுக சாா்பில் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்படும் வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

Story image

இதனை சற்றும் எதிா்பாராத திமுகவினருக்கு பலத்த அதிா்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், தலைவா் பதவியை எதிா்பாா்த்து இருந்த பாண்டியம்மாள், திடீரென பதற்றமடைந்த நிலையில் மயங்கிச் சரிந்தாா். இதைக் கண்ட உறவினா்கள் அந்தியூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இச்சம்பவம் திமுக நிா்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.