ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பவானி நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் வேட்பாளா்கள் அறிவிப்பு

பவானி நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:05 pm

DIN

பவானி நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பவானி நகராட்சியில் 27 வாா்டுகளில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனா். இவா்கள் அனைவரும் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். திமுக சாா்பில் தலைவா் பதவிக்கான வேட்பாளராக 24ஆவது வாா்டியில் வெற்றி பெற்ற சிந்தூரி இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளாா். பொறியியல் பட்டதாரியான இவா், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜனின் மருமகள்.

திமுக கூட்டணியில் துணைத் தலைவா் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அப்பதவிக்கான வேட்பாளராக 11ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சி.மணி அறிவிக்கப்பட்டுள்ளாா். மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில் அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் யாரும் அறிவிக்கப்படாவிட்டால் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.